பொதுத்தேர்தலுக்கு பின்னரே பட்டதாரிகளுக்கு நியமனம் கிடைக்கும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா என்று அழைக்கும் விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் அமைந்துள்ள கந்தசுவாமி கோயில் அருகில் இன்று (01) மதியம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு இவ்வாறு தெரிவித்தார்.
ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு மற்றும் பட்டதாரிகளுக்கான நியமனம் என்பன பொதுத்தேர்தலின் பின்னர் நிறைவு பெறும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.
0 Comments