Advertisement

Responsive Advertisement

சீனா- வுஹான் நகரிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட மாணவர்களில் 14 பேர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

சீனா- வூஹான் நகரிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட 33 மாணவர்களில் 14 பேர் மருத்து பரிசோதனைகளை பூர்த்தி செய்து கொண்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த 14 பேரும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்ததன் பின்னரே இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான சிறப்பு விமானம் மூலம் குறித்த மாணவர்கள் சீனாவின் வூஹான் நகரில் இருந்து மத்தல விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து மத்தல விமான நிலையத்தில் அனைத்து மாணவர்களும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். அதன் பின்னர் தியத்தலாவ இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள வைத்திய முகாமிற்கு மேலதிக பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments