(நூருல் ஹுதா உமர்/எம்.ஐ.சர்ஜூன்)
"அவுஸ்திரேலியன் எயிட்" நிறுனத்தின் அனுசரனையில், நாடாளாவிய ரீதியில் சமையல் கலைஞர்களை தெரிவு செய்து அவர்களது திறமைகளை மேம்படுத்தும் நோக்கில் நடாத்தப்படும் Supreme Chef - Season 2 சமையல் போட்டி நிகழ்வில் சாய்ந்தமருதைச் சேர்ந்த நளீம் திறமையை வெளிப்படுத்தியமைக்காக சிறந்த சமையல் கலைஞராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 29, 30ம் திகதிகளில் "Skills for Inclusive Growth" எனும் தொனிப்பொருளில் அம்பாறை நகரில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 150 சமையல் கலைஞர்கள் மத்தியில் சிறந்த சமையல் கலைஞர்களை தெரிவு செய்யும் போட்டியில் கலந்துகொண்ட இவர் முதல் சுற்றில் 20 பேர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டார்.
பின்னர் நடைபெற்ற குறித்த 20 பேர்களுக்கிடையிலான போட்டியில் 06 பேர்களுள் ஒருவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன்போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உணவுக்கலை சிறப்புத் தேர்ச்சிபெற்ற நடுவர்கள் கலந்துகொண்டே மேற்படி கலைஞர்களை தெரிவு செய்திருந்தனர். இந்நிகழ்வுகள் யாவும் சிரச தொலைக்காட்சியில் தொகுப்பாக வெளியிடப்படவுள்ளது.
மேற்படி ஆறு பேர் உட்பட கிழக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்கள் மற்றும் பொலநறுவை மாவட்டத்திலிருந்தும் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு மட்டக்களப்பிலுள்ள மியானி தொழிற்பயிற்சி நிலையத்தில் கொடுப்பனவுடனான பயிற்சிகள் வழங்கப்படும். இதிலும் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்துவோரில் 04 பேருக்கு அவுஸ்திரேலியா நாட்டுக்குச் செல்வதற்கான வாய்ப்பு கிட்டவுள்ளது.
அத்துடன் மேற்படி பயிற்சி பெறுவோருக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள முன்னணி ஹோட்டல்களில் சமையல் கலைஞர்களாக பணியாற்றுவதற்கான வாய்ப்பை பெறவுள்ளனர்.
சமையற் கலைஞரான நளீம் சவுதி அரேபியா, துபாய், கட்டார் நாட்டிலுள்ள முன்னணி உணவகங்களில் பணியாற்றி பல வருட அனுபவங்களைப் பெற்றவராவார். இவர் தற்போது இலங்கையில் திருமண மற்றும் விஷேட வைபவங்களுக்கான உணவுகளை வினியோகிக்கும் Sunrise Catering Services எனும் தனது சொந்த நிறுவனத்தை நடாத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
UMAR LEBBE NOORUL HUTHA UMAR
BBA (HRM), Dip.In. Journalism, IBSL, ICDL
+94 766735454 / +94 757506564
0 comments: