Advertisement

Responsive Advertisement

கல்முனை, இஸ்லாமாபாத் பகுதியில் பெற்றோல் குண்டு தாக்குதல்

( எம்.ஐ.எம்.அஸ்ஹர் )

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இஸ்லாமாபாத் வீட்டுத்திட்ட குடியிருப்பு பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமைத நள்ளிரவு 12.45 மணியளவில் கைக்குண்டு தாக்குதலொன்று இனம் தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இக்கைக்குண்டு தாக்குதலின் நோக்கம் என்னெவென்று அறியப்படாத நிலையில் இத்தாக்குதலினால் எந்தவொரு உயர்ச்சேதமோ உடமைகளுக்கான சேதமோ  ஏற்படவில்லையென கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.
 இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் இக்கைக்குண்டு வீச்சு தொடர்பாக கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகளையும்  மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments