Home » » கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் 2020 ஆம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டுப் போட்டியினை உத்தியோகபுர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் 2020 ஆம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டுப் போட்டியினை உத்தியோகபுர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு

( அஸ்ஹர் இப்றாஹிம்)

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் 2020 ஆம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டுப் போட்டியினை உத்தியோகபுர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு இன்று ( செவ்வாய்க்கிழமை)  கல்லூரி மைதானத்தில் மிகவும் பிரமாண்டமான முறையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
கல்லூரி அதிபர் எம்.ஐ.எம்.ஜாபிர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். சாய்ந்தமருது கோட்ட கல்விப் பணிப்பாளர் ஐ.எல்.ஏ.றஹ்மான் கௌரவ அதிதியாகவும்  பழைமாணவர் சங்க செயலாளர் அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோஸ்தர் ஏ.எம்.எம்.றிபாஸ் , பாடசாலை அபிவிருத்தி சபை செயலாளர் எம்.ஐ.எம்.முஸ்த்தாக் ஆகியோர்  விசேட  அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
இல்லங்களின் கொடிகளை  மர்வா இல்ல பொறுப்பாசிரியர் எஸ்.எல்.றஸாக் , சபா இல்ல பொறுப்பாசிரயர் அப்துல் வகாப் , அரபா இல்ல கொடியினை பொறுப்பாசிரியர் . ஏ.எம்.ஹக்குிம் , ஹிரா இல்ல கொடியினை பொறுப்பாசிரியர் மெ்.ஐ.முராத் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.
கல்முனை வலய உடற்கல்வித்துறை உதவி கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம்.சாஜித்  உத்தியோகபுர்வமாக இல்ல விளையாட்டுப் போட்டியினை ஆரம்பித்து வைத்தார்.


விளையாட்டு வீரரின் சத்தியப்பிரமாணத்தை கிழக்கு மாகாண ரீதியில் இடம்பெற்ற 110 மீற்றர் , 300 மீற்றர் தடைதாண்டல் போட்டியில் சாதனை ஏற்படுத்திய மாணவன் எம்.ஆர்.எம்.லயிஸ் வாசித்தார்.
கல்முனை வலய உடற்கல்வித்துறை ஆசிரிய ஆலோசகர் ஐ.எல்.எம்.இப்றாஹிம் நடுவர்களுக்கான சத்தியப்பிரமாணத்தை வாசித்தார்  .
கல்லூரியின் பாண்ட் வாத்தியக்குழு , கடற்படை , சென்ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் படை , கராட்டிக்குழு , மாணவத்தலைவர்கள் குழு , இல்ல ரீதியிலான அணிநடை குழுக்கள் , இல்ல ஆசிரிய ஆசிரியைகள் ஆகியோரின் அணிவகுப்பைத்  தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.
நிகழ்வின் இறுதியில் வான வேடிக்கை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |