அதிதேகு ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஸ அவர்களின் எண்ணக்கருவிற்கமைய நகரையும் நாட்டையும் அழகு படுத்தும் திட்டத்திற்கு அமைவாக சாய்ந்தமருது - மாளிகைக்காடு எல்லை வீதியில் அமைந்துள்ள தோணாவிற்கு மேலாக செல்லும் பாலம் மற்றும் சுற்றயல் பொதுமக்களின் பங்களிப்புடன் அழகுபடுத்தப்பட்டு இலங்கை திருநாட்டின் 72வது சுதந்திர தினத்தன்று திறந்து வைக்கப்பட்டது.
நாட்டின் 72 ஆவது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையிலும், அதிமேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்களின் நாட்டை அழகுபடுத்தும் திட்டத்திற்கு அமைவாகவும் முற்றுமுழுதான பொது மக்கள் பங்களிப்புடன் தோணா சுத்தம் செய்யப்பட்டு, அழகு படுத்தப்பட்டு சாய்ந்தமருது மாளிகைக்காடு எல்லை வீதியான மாளிகா வீதி பாலம் அருகில் பூந்தொட்டிகள் அமைக்கப்பட்டு அதனுள் புமரங்கள் நாட்டப்பட்டு மனதிற்கு மகிழ்வுட்டும் அழகானதொரு சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வீதியானது பலவழிகளில் பிரசித்துபெற்ற ஒன்றாக விளங்குகின்றது. வடக்கு புறமாக கல்முனைத்தொகுதியையும் தெற்கு புறமாக பொத்துவில் தொகுதியையும் , வடக்கு புறமாக கல்முனை மாநகர சபையையும் , தெற்கு புறமாக காரைதீவு பிரதேச சபையையும் , வடக்கு புறமாக கல்முனை பொலிஸ் பிரிவையும் தெற்கு புறமாக சம்மாந்துறை பொலிஸ் பிரிவையும் எல்லையாக கொண்டுள்ளது. இதனால் இவ்வீதியையோ இப்பாலத்தையோ முகாமைத்துவம் செய்வதில் பல ஆண்டுகளாக நிர்வாக ரீதியில் பல இடர்பாடுகள் காணப்பட்டதால் இப்பாலத்தை குறுக்கறுத்துச் செல்லும் தோணா குப்பை நிறைந்திருந்ததுடன் சூழலுக்கு பலத்த சவாலாக அமைந்திருந்தது.
கல்முனை மாநகரசபையின் சாய்ந்தமருது பிரதேச உறுப்பினர் ஏ.எம்.ஏ.அஸீஸ் மற்றும் அவருடன் இணைந்த இளைஞர்களும் பொதுமக்களும் இணைந்து தோணாவை துப்பரவு செய்ததுடன் அதனையண்டியுள்ள பிரதேசத்தை அழகுபடுத்தியிருப்பது பெரும் பாராட்டுக்குரிய ஒரு விடயமாகும்.
காலாகாலமாக அரசியல்வாதிகளின் பணம் சம்பாதிக்கும் ஒரு பிரசித்திபெற்ற இடமாக காணப்பட்ட இத்தோணா இனிமேல் எவருகு்கும் துணைபோகாத இடமாக மாறியுள்ளமை பெருமையளிக்கின்றது.
அழகுபடுத்தப்பட்ட மாளிகைக்காடு தோணா பிரதேசம் சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத்தலைவர்
அல்ஹாஜ் வை.எம்.ஹனீபா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
0 comments: