Advertisement

Responsive Advertisement

பிரதேச இளைஞர் அணிகளின் முதலாவது ஒன்றுகூடல் நிகழ்வு

( அஸ்ஹர் இப்றாஹிம்)
சாய்ந்தமருது சமூகமாற்றத்திற்கும் அபிவிருத்திக்குமான மய்யம் ஒழுங்கு செய்திருந்த பிரதேச இளைஞர் அணிகளின் முதலாவது ஒன்றுகூடல் நிகழ்வு அண்மையில் சாய்ந்தமருது கல்யாண வீதியிலுள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது.
சமூகத்தின் சக்திமிக்க தூண்களான இளைஞர்கள் மூலம் பிரதேசத்தில் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டு எதிர்வரும் நாட்களில் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுக்க இளைஞர் அமைப்புகளால் ஏகமானதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிகழ்வில் பொருளாதார உபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சின் முன்னாள் செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் , கல்முனை மாநகரசபை சாய்ந்தமருது பிரதேச  உறுப்பினர்களான ஓய்வுபெற்ற நில அளவையாளர் எம்.ஏ.றபீக் , ஏ.ஆர்.எம்.அஸீம் உட்பட பல இளைஞர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments