பதுளையில் கொரோனா வைரஸ் தொற்று என்று சந்தேகிக்கப்படும் அறிகுறிகளுடன் யுவதியொருவர் பதுளை பொது வைத்தியசாலையில் இன்று 05.02.2020 மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சீனாவின் யுன்ஹாய் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் குறித்த யுவதி சில தினங்களுக்கு முன்பே இலங்கையை வந்தடைந்துள்ளார்.
22 வயதுடைய மொனாராகலையைச் சேர்ந்த இவர், பதுளை வைத்தியசாலையின் விசேட சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையின்படி, அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக மருத்துவர்கள் சந்தேகித்தனர்.
அதன்படி, யுவதி பதுளை பொது வைத்தியசாலைக்கு சுகாதார மருத்துவ அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் அனுப்பப்பட்டார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (ஜி.எம்.ஓ.ஏ) ஊவா மாகாண ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பாலித ராஜபக்ஷ, ஒரு வசதியான அம்புலன்ஸில் யுவதியை சிறப்பு சிகிச்சை பிரிவுக்கு அழைத்துச் சென்று, அங்கு வைத்திய பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றார்.
0 comments: