Advertisement

Responsive Advertisement

கல்முனை ஹொலிபீல்ட் விளையாட்டு கழகத்தின் 26வது ஆண்டு நிறைவு ,

( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
கல்முனை பிரதேசத்தின் முன்னணி விளையாட்டு கழகமான கல்முனை ஹொலிபீல்ட் விளையாட்டு கழகத்தின் 26வது ஆண்டு நிறைவு , வருடாந்த பொதுக்கூட்டம் மற்றும் அண்மையில் இறையடி எய்திய கழகத்தின் தவிசாளரும் மூத்த ஊடகவியலாளருமான மர்ஹூம் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி அவர்களுக்கான துவாப் பிரார்த்தனையும் சாய்ந்தமருது ஸீ பிரீஸ் ரெஸ்ரோரண்டில் இன்று ( 4 ) இடம்பெற்றது.
கழகத்தின் ஸ்தாபக தலைவர் எம்.எம்.ஜெஸ்மின் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட கிறிக்கட் சம்மேளனத்தின் செயலாளர் சிதத் என் லியனாராய்ச்சி கலந்து கொண்டதுடன் கழகத்தின் 2020 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளாக தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
,நிகழ்வின் இறுதியில் மர்ஹூம் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி அவர்களின் மறுமை ஈடேற்றத்திற்காக மெளலவி எம்.எப்.எம்.ஜவ்சி அவர்களினால் துவா பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.
நிகழ்வில் கழகத்தின் செயலாளர் பேராசிரியர் எஸ்.எல்.றியாஸ் , உப தலைவர் ஏ.ஆர்.எம்.நியாஸ் , ஆலோசகர் எஸ்.எல்.கலீலுர் றஹ்மான் , பொருலாளர் எம்.எச்.எம்.ஹனீப் ஆகியோர் பிரசன்னமாக இருந்ததுடன் தொலைக்காட்சி அறிவிப்பாளரும் உப தலைவருமான எம்.அன்ஸகான் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
அம்பாறை மாவட்ட கிறிக்கட் சம்மேளனத்தின் செயலாளர் சிதத் என் லியனாராய்ச்சி இம் மாவட்டத்தில் கிறிக்கட் துறைக்கு ஆற்றிவரும் அருஞ்சேவைக்காக நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

Post a Comment

0 Comments