( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
சாய்ந்தமருது சமூக மாற்றத்திற்கும் அபிவிருத்திக்குமான மய்யம் ஒழுங்கு செய்திருந்த இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 72வது சுதந்திர தினத்தையொட்டிய நிகழ்வுகள் இன்று மாலை சாய்ந்தமருது கல்யாண வீதியிலுள்ள அதன் காரியாலயத்தில் இடம்பெற்றது.
கல்முனை பிரதேச செயலக சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஸி.ஏ.நஜீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகரசபை சாய்ந்தமருது பிரதேச உறுப்பினர் ஏ.ஆர்.எம்.அஸீம் , முன்னாள் கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.ஐ.எம்.சதாத் , சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத்தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனீபா , சட்டத்தரணி என்.எம்.முஜீப் ஆகியோர் இலங்கையின் சுதந்திரத்தில் முஸ்லீம்களின் பங்கு மற்றும் இஸ்லாத்தில் நாட்டுப்பற்று சம்பந்தமாக உரை நிகழ்த்தினார்கள்.
நிகழ்வின் இறுதியில் தென்கிழக்கு பல்கலைக்கழக உடற்கல்வித்துறை விரிவுரையாளர் ஐ.எம்.கடாபி நன்றியறிதலை நிகழ்த்தினார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் அறிவிப்பாளர் ரோஸன் அக்தார் தொகுத்து வழங்கியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
0 Comments