கிழக்கில் பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டுமென விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் கல்வி மற்றும் சுகாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டுமென, முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த காலங்களில் தமிழ் மக்களின் தேவைகளுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவித திட்டங்களையும் முன்னெடுக்கவில்லையெனவும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
0 Comments