Advertisement

Responsive Advertisement

வாழைச்சேனை பகுதியில் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவர் கைது


வாழைச்சேனை கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட காட்டு பகுதியில் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தனிகாசலம் தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர்களின் திடீர் சோதனையின் போது குடும்பிமலை காட்டுப் பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்திவெளி பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய இளைஞரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments