இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் 13 ஆவது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாராகவே உள்ளோம். என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் மகிந்த ‘இந்து ’பத்திரிகைக்கு அளித்த பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்
13 ஆவது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த நாம் தயாராகவுள்ளோம். அது தொடர்பில் பேச்சுவாரத்தை நடத்தப்படவேண்டும்.தமிழர் பகுதிகளில் இதற்கான பொறுப்பினை யார் ஏற்பது?
எனவே எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும்.இதன்போது தெரிவானவர்கள் எதிர்காலத்தில் எம்முடன் பேச்சு நடத்த அழைக்கப்படுவார்கள்.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் இது தொடர்பில் கலந்துரையாட தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிக ஆர்வம் காட்டவில்லை.
அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்பார்ப்பதை வழங்க இலங்கையிலுள்ள பெரும்பான்மையான சமுகம் விரும்பவில்லை எனவும் தெரிவித்தார்.
இதேவேளை சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் சிங்கள மொழியில் பாடப்பட்டமை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த மகிந்த,
உலகில் ஒவ்வொரு நாட்டிலும் தேசிய கீதம் ஒரே மொழியிலேயே பாடப்படுகிறது.இந்தியாவில் பல மொழிகள் இருந்தாலும் சுதந்திரதினத்தில் ஒரு மொழியிலேயே தேசிய கீதம் பாடப்படுகின்றது.எமது நிலைப்பாடும் அதுவே.நான் யாழ்ப்பாணத்தில் பாடசாலைகளுக்கு செல்லும்போது அங்கு மாணவர்கள் தமிழிலேயே தேசிய கீதத்தை பாடுகின்றார்கள்.அதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.அவர்களது வழியில் விட்டு விடுகின்றோம்.
சில அரசியல்வாதிகளே இதனை பெரிதாக்குகின்றனர்.பொதுமக்கள் இதனை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
0 Comments