Home » » சாரதி உயிரோடு எரிக்கப்பட்டாரா?கண்டுபிடித்தது எவ்வாறு?

சாரதி உயிரோடு எரிக்கப்பட்டாரா?கண்டுபிடித்தது எவ்வாறு?

வவுனியாவில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து வெள்ளவத்தை நோக்கி பயணித்த வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதேவேளை வாகனத்திற்குள் சாரதி சிக்கியிருந்த நிலையில், சிலரினால் பஸ்ஸிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது எனவும் இதன் காரணமாக சாரதி இறந்தார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. பொதுவாக இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் விபத்தினை தொடர்ந்து வாகனங்களுக்கு தீ வைக்கும் சம்பவங்கள் கடந்த காலங்களில் நடைபெற்றுள்ளன. இதன் காரணமாகவே சாரதிகள் வாகனத்தினை நிறுத்தாமல் நேரே போலீஸ் நிலையம் சென்று விடுவதும் உண்டு.

இப்பதிவு ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்டு இறந்தாரா? அல்லது இறந்த நிலையில் எரிக்கப்படாரா? என்று எவ்வாறு ஓர் சட்ட வைத்தியர் ஒருவர் உடற் கூராய்வு பரிசோதனையின் பொழுது கண்டுபிடிப்பார் என்பதினை விளக்குகின்றது.
சாதாரணமாக ஒருவர் உயிருடன் இருக்கும் பொழுது அவரது இருதயம் துடித்துக் கொண்டு இருக்கும் மற்றும் நுரையீரல் சுருங்கி விரிவதன் மூலம் காற்றினை உள்ளிழுத்து வெளித்தள்ளிய வண்ணம் இருக்கும். இவ்வாறு வாகனம் ஒன்று எரியும் பொழுது அதில் உள்ள இறப்பரினால் ஆன மற்றும் பிளாஸ்ட்டிக்கினால் ஆன பகுதிகள் எரியும். இதன் பொழுது அவற்றில் இருந்து பல்வேறு பட்ட நச்சுவாயுக்கள் வெளியேறும். இவ்வாயுக்கள் மனிதனுக்கு கடுமையான உடல்நலக்கேட்டினை விளைவிக்க வல்லன. இவ்வாயுக்களில் முக்கியமானது கார்பன் மோனோக்சைட் என்பதாகும். இவ்வாயு நாம் சாதாரணமாக சுவாசிக்கும் ஓட்ஸிசனை விட 200 மடங்கு விரைவாக எமது இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் உடன் இணைந்து கொள்ளும் இதன் காரணமாக ஓட்ஸிசன் காவுதல் தடைப்பட இறப்பு நிகழும்.
எனவேதான் உடற் கூராய்வு பரிசோதனையில் இறந்தவரின் இரத்த மாதிரி பெறப்பட்டு அதில் கார்பன் மோனோக்சைட் மற்றும் ஏனைய வாயுக்கள் இருக்கின்றனவா என பரிசோதிக்கப்படும். அவ்வாறு இருக்கும் பட்ஷத்தில் அவர் தீ பற்றி எரியும் பொழுது உயிருடன் இருந்திருக்கின்றார் என முடிவு செய்யப்படும்.
இறந்த பின்னர் இருதயம் துடிக்காது மற்றும் நுரையீரல் சுருங்கி விரியாது இதன் காரணமாக மேற்குறித்த வாயுக்கள் இரத்தத்துடன் இரசாயன ரீதியில் சேராது இருக்கும்.
உடற் கூராய்வு பரிசோதனையின் பொழுது கார்பன் மோனோக்சைட்டு வாயு சேர்வதினால் இறந்த ஒருவரின் உடலின் தோல் மற்றும் அங்கங்கள் சிவப்பு நிறத்தில் மாறி இருக்கும். இதன் மூலம் குறித்த நபர் உயிருடன் இருந்தார் என்பது உறுதிப்படுத்தப்படும். இவை தவிர இறந்தவரின் தொண்டை பகுதியில் அவர் சுவாசம் மேற்கொண்டதன் காரணமாக கரி போன்றன படிந்திருக்கின்றனவா எனவும் பரிசோதிக்கப்படும்.
soot in larynx autopsy casesக்கான பட முடிவுகள்
மேலுள்ள படம் ஆனது ஒருவர் உயிருடன் எரிந்த பொழுது அவர் சுவாசித்ததன் காரணமாக கரியானது எவ்வாறு அவரின் சுவாச தொகுதியில் படிந்திருப்பதினை விளக்குகின்றது.
மேற்குறித்த செயற்பாடுகள் மூலம் ஒருவர் தீப்பற்றி எரியும் பொழுது உயிருடன் இருந்தாரா அல்லது இறந்த நிலையில் எரிக்கப்பட்டாரா என்பதினை இலகுவாக கண்டு பிடிக்கலாம்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |