( அஸ்ஹர் இப்றாஹிம்)
சாய்ந்தமருதின் முதிசங்களான ” பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 2020 ஆம் ஆண்டுக்கான நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் விளையாட்டுத்துறையில் மட்டும் தம்மை மட்டுப்படுத்திக் கொள்ளாமல் சமூகப்பணிகளிலும் இக்கழக உறுப்பினர்களை ஈடுபடுத்தும் அடிப்படையில் சாய்ந்தமருது வொலிவேரியன் பொது விளையாட்டு மைதானத்தின சுற்றுப்புற பிரதேசம் சிரமதான அடிப்படையில் சுத்தம் செய்யப்பட்டது.
சாய்ந்தமருது ”பிரேவ் லீடர்ஸ்” விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவரும் ஓய்வுபெற்ற மக்கள் வங்கி முகாமையாளருமான எம்.எஸ்.ஏ.மசூட் , சிரேஸ்ட உறுப்பினர் எம்.வை. ஹாறூன் ஆகியோரின் வழிகாட்டலில் அம்பாறை வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர் எம்.எம்.முனாஸ் அவர்களின் அனுசரணையில் கழகத்தின் தலைவரும் அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோஸ்தருமான ஏ.எம்.எம்.றிபாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற மேற்படி சிரமதான பணியில் கழகத்தின் உறுப்பினர்கள் , சாய்ந்தமருதின் ஏனைய கழகங்களின் பிரதிநிதிகள் , விளையாட்டு ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மைதானத்தை சுற்றவுள்ள சூழல் தினசரி குப்பை கூழங்கள் நிறைந்த சூழலாக காணப்படுவதால் அருகிலுள்ள வீட்டுத்திட்டத்தில் குடியிருப்போரும் விளையாட்டு பயிற்சியில் ஈடுபடுவோரும் தினசரி பலவிதமான சுகாதார சீர்கேட்டை எதிர்நோக்க வேண்டியுள்ளது. எனவே இதனை கருத்திற்கொண்டு மைதானத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அண்மையில் ” பிரேவ் லீடர்ஸ் இளைப்பாறும் நிலையம் ” ( Brave Leaders rest Park ) ஒன்றை நிதந்தரமாக நிறுவுவதன் மூலம் அந்த பிரதேசங்களில் குப்பை கொட்டும் நடவடிக்கையினை குறைப்பதுடன் விளையாட்டு வீரர்கள்
இளைப்பாறுவதற்கும் பொழுது போக்குவதற்குமாக இதனைப் பயன்படுத்த முடியும் என கழகத்தின் தலைவரும் அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோஸ்தருமான ஏ.எம்.எம்.றிபாஸ் தெரிவித்தார்.
0 Comments