(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் புலி பாய்ந்தகல் மீயான்குளம் பிரதேசத்தில் யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிர் இழந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (07.01.2020) இரவு இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஜய பெரமுன தெரிவித்தார்.
கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் சந்திவெளி திகிளிவெட்டை பிரதேசத்தை சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான ஆறுமுகம் ரவிச்சந்திரன் (வயது – 43) என்பவரே உயிர் இழந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஆறுமுகம் ரவிச்சந்திரன் என்பவர் புலிபாய்ந்தகல் மீயான்குளம் பிரதேசத்தில் தனக்குச் செந்தமான வயலில் இரவு காவலுக்காக செவ்வாய்க்கிழமை இரவு சென்ற வேளையே யானை தாக்கியதில் உயிர் இழந்துள்ளார்.
இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு விசாரனைகளின் பின்னர் உறவினர்களிடததில் கையளிக்கப்பட்டது.
0 comments: