அத்துடன் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை ஒடுக்குவதற்கு, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின் இலங்கைக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உதவிகள் பயன்படுத்தப்படாமலிருப்பதை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
இதேவேளை சர்வதேச நீதி, உண்மைக்கான திட்டம் மற்றும் இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர் அமைப்பு ஆகியன முன்வைத்துள்ள அறிக்கையில்,
இலங்கையை இராணுமயப்படுத்தும் நடவடிக்கையில் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் தலைமையிலான புதிய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
தன்னை விமர்சிப்பவர்களையும், மனித உரிமை பாதுகாவலர்களையும் இலக்கு வைத்து இலங்கை அரசாங்கம் அச்சம் தரும் ஒடுக்குமுறையை முன்னெடுத்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் இடம்பெற்றுள்ள 69 சம்பவங்களை பதிவு செய்துள்ள இந்த அமைப்புகள் பத்திரிகையாளர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள், சட்டத்தரணிகள், வழக்கு தாக்கல் செய்தவர்கள், எதிர்கட்சி உறுப்பினர்கள் உட்பட பலர் அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல்களிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இந்த அச்சுறுத்தல்கள் சிலவேளைகளில் மிக மோசமானவையாக காணப்பட்டதால் சிலர் இலங்கையை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை ஜனாதிபதி தனது முன்னைய படைத்தரப்பு சகாக்கள் பலரை முக்கிய பதவிகளில் நியமித்துள்ளதன் மூலம் தனது ஆதிக்கத்தை விரிவுப்படுத்தியுள்ளார்.
அதிகளவிற்கு பொலிஸ் மற்றும் புலனாய்வு பணிகளை இராணுவமயப்படுத்தியுள்ளர். மோசடி உட்பட கடந்த கால குற்றங்களை விசாரணை செய்தவர்கள் அந்த பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
0 Comments