Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பரபரப்பான அரசியல் தீர்மானத்தை எடுக்க தயாராகும் சபாநாயகர்



சபாநாயகர் கரு ஜயசூரிய பரபரப்பான அரசியல் தீர்மானம் ஒன்றை எடுக்க தயாராகி வருவதாக அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தான் எடுக்க உள்ள தீர்மானம் காரணமாக அரசியல் துறையில் புதிய அனுபவம் ஏற்படும் என கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளதாக சுட்டிக்காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனநாயக வரையறைக்குள் இருந்து அரசியல் தீர்மானங்களை எடுக்கும் நபர் என்ற வகையில் பிரபலமான கரு ஜயசூரிய, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமரை நீக்கி விட்டு, நாடாளுமன்றத்தை கலைத்த நேரத்தில் நாடாளுமன்றத்திற்குள் பெரிய போராட்டத்தை முன்னெடுத்தார்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய எடுக்கப் போகும் பரபரப்பான அரசியல் தீர்மானம் என்ன என்பது இதுவரை வெளியாகவில்லை என அவரது அலுவலகத்தின் தகவல்கள் கூறுகின்றன.

Post a Comment

0 Comments