இந்திய அணியுடன் இடம்பெற்ற 20 இற்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் தோல்வி கண்டமையை அடுத்து இலங்கை அணியின் தலைவராக செயற்பட்ட லசித் மலிக்கவை பதவிலிருந்து நீக்கிவிட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தனுன் சானுக்கவை இலங்கை அணியின் தலைவராக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இலங்கை கிரிக்கெட்டின் அதிகாரி ஒருவர் இதனை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இலங்கையில் 52 நாள் அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது டிசம்பர் 2018இல் மலிங்க இலங்கை 20 இற்கு 20 கிரிக்கெட் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
எனினும் அவர் தலைமை தாங்கிய போட்டிகள் அனைத்தும் தோல்விகளை தழுவின. இந்த நிலையில் பாகிஸ்தானில் தசுன் சானுக்க தலைமையிலான அணி போட்டியிட்டு மூன்று 20 இற்கு 20 போட்டிகளிலும் வெற்றி பெற்றது.
மலிங்கவின் தலைமையில் அணியில் பாரிய பிரிவுகள் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அவர் அணியின் வீரர்களுடன் இணங்கி செயற்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டிருந்தது.
இந்தியாவில் கடைசியாக இடம்பெற்ற 20 இற்கு 20 போட்டிகளின் போது அவர் திஸ்ஸர பெரேரா மற்றும் அஞ்சலோ மெத்தியூஸ் ஆகியோருக்கு இறுதிப் போட்டியில் மாத்திரமே வாய்ப்பை அளித்தார்.
ஏற்கனவே அவரை இலங்கை அணியின் ஒருநாள் போட்டிகளில் இருந்து விலக்க நடவடிக்கை எடுத்த போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெறப் போவதாக எச்சரித்திருந்தார்.
இதனையடுத்தே அவரை 20 இற்கு 20 போட்டிகளில் மாத்திரம் தலைவராக நியமிப்பது என முடிவெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments: