Home » » கல்லாற்றில் தைபொங்கலை முன்னிட்டு மரதன் ஓட்டப்போட்டி இடம்பெற்றது

கல்லாற்றில் தைபொங்கலை முன்னிட்டு மரதன் ஓட்டப்போட்டி இடம்பெற்றது


(க. விஜயரெத்தினம்)
கல்லாற்றில் தைபொங்கலை முன்னிட்டு மரதன் ஓட்டப்போட்டி இடம்பெற்றது.



கல்லாறு விளையாட்டுக்கழகமானது தைப்பொங்கலை முன்னிட்டு பெரியகல்லாறு சர்வார்த்த ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய முன்றலில் மாபெரும் மரதன் ஓட்டப்போட்டியை இன்று ஞாயிற்றுக்கிழமை(12)காலை 7.00 மணியளவில் நடாத்தியது.

கல்லாறு விளையாட்டுக் கழகத்தின் தலைவரும்,ஆசிரியருமான சி.சசிகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரேத சபை உறுப்பினர்களான த.சுதாகரன்,ச.கணேசநாதன்,பெரியகல்லாறு மத்திய கல்லூரியின் அதிபர் சி.பேரின்பராஜா,சித்தி விநாயகர் வித்தியாலயத்தின் அதிபர் சி.முருகானந்தம்,ஓய்வு பெற்ற உடற்கல்வி உதவிப்பணிப்பாளர் என்.நாகராசா,தேசிய சேமிப்பு வங்கியின் சம்மாந்துறை பணிமனையின் முகாமையாளர் கே.சுரேஸ்,ஊடகவியலாளர் க.விஜயரெத்தினம் உட்பட விளையாட்டு வீரர்கள்,இளைஞர்கள்,விளையாட்டுகழக உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள்.

கல்லாறு விளையாட்டுக்கழகத்தின் முதல் மரதன் ஓட்டப்போட்டியானது 1991ஆம் ஆண்டு நடைபெற்றது.அன்று முதல் இன்றுவரையும்  ஒவ்வொரு வருடமும் விளையாட்டுக் கழகத்தினால் மரதன் ஓட்டப்போட்டி  இடம்பெற்று வருகின்றது.அந்தவகையில் இவ்வாண்டும் தைப்பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற மரதன் ஓட்டப்போட்டியில் பல வீராங்கனைகள் போட்டியில் கலந்துகொண்டார்கள்.

இம்மரதன் ஓட்டப்போட்டியானது பெரியகல்லாறு சர்வார்த்த சித்தி விநாயகர் ஆலயத்தின் முன்பாக ஆரம்பமாகி பிரதான வீதி,ஊர்வீதி ஊடாக மூன்று சுற்றுக்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.இதற்கான அனுசரணையை இக்கிராமத்தை சேர்ந்த அற்புதராசா விஜிதரன் குடும்பத்தாரும்,கல்முனை அபான்ஸ் நிறுவனமும் வழங்கியது.
இம்மரதன் ஓட்டப்போட்டியில் முதலாவது இடத்தை த.அஜந்தன் கல்லாற்றில் இவ்வருடத்துக்கான சம்பியன் பரிசைக் சுவீகரித்துக்கொண்டதுடன் இரண்டாம் இடத்தை ஆர்.ரஜிகாந்தும்,மூன்றாம் இடத்தை பீ.சனுகாந்தும் தட்டிக்கொண்டார்கள்.இவர்களுக்கும்,மரதன் ஓட்டப்போட்டியில் முதல் பத்து இடங்களை தட்டிக்கொண்டவர்களுக்கும் பணப்பரிசுகளும்,சிறப்புபரிசில்களும் அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டது.









Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |