Advertisement

Responsive Advertisement

கிழக்கில் புதிய அரசியல் கட்சி உதயம்


த.தவக்குமார்

புதிய அரசியல் கட்சி ஒன்றை ஸ்தாபிப்பது சம்மந்தமாக    பூர்வாங்க பேச்சுவார்த்தை முடிவுற்றுள்ளதாகவும் அந்த புதிய கட்சியான இலங்கை தமிழர் முற்போக்கு முன்னணி விரைவில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படும் என முன்னாள் பிரதியமைச்சர் சோ.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்

தமிழ் பேசும் மக்களுடைய அனைத்து பிரச்சனைகளையும் கவனிப்பதோடு தமிழ் பிரதேசங்களுடைய அபிவிருத்தி மற்று பல்வேறுபட்ட பிரச்சகைகள் அனைத்தையும் இக்கட்சி முகம் கொடுக்க தீர்மானித்துள்ளதாகவும்.

இதேவேளை வடகிழக்கு மாகாணங்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்று வழங்கப்படவேண்டும் அத்தீர்வு சமஷ்டி முறையிலான தீர்வாக  அமையவேண்டும் அதிகாரப்பரவலாக்கல் வடகிழக்கு மாகாணங்களுக்கு வழங்கப்பட்டு பதிமூன்றாவது அரசியல் அமைப்பு திட்டத்தில் உள்ள அனைத்து விடயங்களும் வழங்கப்பட்டு பூரண அதிகாரங்களை மாகாண சபைகளாக இந்த மாகாணங்களும் இயங்கவேண்டும் எனவும் தெரிவித்தார்  அதேவேளை

வருகின்ற பொதுத்தேர்தலில் தனது தலமையில் இக்கட்சி தனித்து நின்று போட்டியிடவுள்ளதாகவும் இக்கட்சியில் கல்வி மான்கள் தொழில் விற்பன்னர்கள்இபுத்திஜீவிகள் எனப்பலரும் இணைந்து கொண்டுள்ளனர். தெரிவித்தார்  .

Post a Comment

0 Comments