Advertisement

Responsive Advertisement

போரதீவுப்பற்று பிரதேச செயலக ஆண்டிறுதி விழாவும் சேவைநலன் பாராட்டும் விழாவும்

2019ம் ஆண்டுக்கான ஆண்டிறுதி விழாவும் சேவைநலன் பாராட்டும் விழாவும் நலன் பரிச் சங்கத்தின் தலைவர் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சசிகுமார் தலமையில் அம்பாறை மாவட்ட உஹணை பிரதேசத்தில் ஹிமித்திராவ கொட்டலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் போது போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி முதன்மை அதிதியாகவும் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் சேவை நலன் பாராட்டும் உத்தியோகத்தர்கள் ஏனைய உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கோட்டைக் கல்லாறு அனிஸ்வரா இசைக்குழுவினரால் இசை மழை பொழிய பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பாடல்கள் நடனங்கள் வில்லுப்பாட்டுகள் சிறுவர்களின் நடனங்கள் போன்றவை மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. 

2019ம் ஆண்டு ஓய்வு பெற்றுச் சென்ற மற்றும் இடமாற்றம் சென்ற உத்தியோகத்தர்களை சேவை நலன் பாராட்டி அவர்களுக்கான நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Post a Comment

0 Comments