ஒட்டாவா, ஒன்டாரியோ - நகரத்தின் மத்திய பகுதியில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
கனேடிய நேரப்படி இன்றைய தினம் காலை 7.30 மணியளவில் பல முறை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது அங்கு பலர் காயமடைந்ததுடன் மூன்று பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக துணை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
எனினும் என்ன காரணத்திற்காக துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பில் கண்டுபிடிக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 Comments