Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சஜித்துக்கு அனைத்து கதவுகளையும் திறந்து விட்ட ரணில் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளை மேற்கொள்வதற்கு தேவையான அனைத்து அதிகாரங்களையும் ரணில் உட்பட ஏனைய சிரேஷ்ட உறுப்பினர்கள் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை வழங்குவதற்கு மாத்திரம் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எனவே எதிர்வரும் பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவதற்கும் கூட்டணியின் தலைமைத்துவத்தை கொண்டு செல்வதற்கும் அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை அடக்குவதற்கான தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு விரிவான வேலைத்திட்டத்தை தொடங்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது.

Post a Comment

0 Comments