மட்டக்களப்பு- கல்லடி பிரதான வீதி சிவானந்தா மைதானத்திற்கு முன்னால் நேற்று மாலை மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில், மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
|
மட்டக்களப்பு நோக்கி கணவன், மனைவி, குழந்தையுடன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி இழுத்து சென்று வேலியுடன் மோதி நின்றதாக விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் கல்முனை- சென்றல் காம்ப் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது. சம்பவத்தில் காயமடைந்த மூவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
|
0 Comments