Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மண்முனை தென் எருவில் பிரதேசத்தில் விமர்சையாக இடம்பெற்ற பொங்கல் விழா


மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கல்லாறு கடல் நாச்சியம்மன் ஆலய முன்றலில் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் தலைமையில் நடைபெற்றது.

காலை 7மணியளவில் கதிரறுவடை நடைபெற்று நெற்கதிர்கள் பவனியாக எடுத்துவரப்பட்டு அங்கு சூடடிக்கப்பட்டு பொலிதூற்றப்பட்டு பின் நெல்மணிகள் நாழிகளில் நிரப்பப்பட்டு கலாசார பண்பாட்டு பவனிகளாக பொய்க்கால் குதிரையாட்டம், கோலாட்டம்,கரகம்,கிராமியஇசைகருவிகள் முழக்கமிட கடல்நாச்சியம்மன் ஆலய முன்றலை சென்றடைந்தது. அங்கு தேசிய கொடி ஏற்றப்பட்டு பின்பு வழிபாட்டினை தொடர்ந்து நெல்மணிகள் உரலிடப்பட்டு நெல்குற்றலுடன் பொங்கல் நிகழ்வுகள் ஆரம்பமாகியது 


அத்துடன் அரங்கை அலங்கரித்த கலை நிகழ்வுகளும் பொங்கல் விழாவினை மேலும் சிறப்படையவைத்தது. இந் நிகழ்வில் மண்முனை தென் எருவில் உதவி பிரதேச செயலாளர் ,உதவி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர் என அனைத்து உத்தியோகத்தர்களும், மண்முனை தென்எருவில் பிரதேச சபை உறுப்பினர்களும், பிரதேச செயலகத்திற்குட்பட்ட மன்றங்கள், கலாசார அமைப்புக்கள் ,கிராம அபிவிருத்தி சங்கங்கள் ,மகளிர் சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்














Post a Comment

0 Comments