அம்பாறை மாவட்டம் தனிச் சிங்கள உஹன பிரதேச செயலகத்தில் தமிழர் பண்பாட்டு கலாசார முறையில் பொங்கல் விழா இடம்பெற்றிருந்தது.
இந்த நிகழ்வுகள் இன்று காலை முதல் உஹன பிரதேச செயலாளர் ஏ.எம்.ஏ. அஜந்தகுமாரி தலைமையில் இடம்பெற்றது.
உஹன பிரதேச செயலகம் 55 கிராமசேவையாளர் பிரிவை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதில் உதவி பிரதேச செயலாளர் கே.எம்.கே.எஸ். குலதுங்க ,கணக்காளர் கே.பிரகஸ்பதி கலாச்சார உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
0 comments: