நேற்று சனிக்கிழமை இரவு கரடியனாறு பிரதேசத்திலுள்ள தும்பாலை எனும் கிராமத்திலிருந்து தாய் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டபோது
அவர்கள் 1990 இலவச அம்புயூலன்ஸ் சேவைக்கு தொடர்பு கொண்டபோது கரடியனாறு பிரிவிலுள்ள அம்புயூலன்ஸ் வண்டி வேறு சேவையில் ஈடுபட்டதனால்
வவுணதீவு நிலையத்தின் அம்புயூலன்ஸ் வண்டி விரைந்து சென்று குறித்த பெண்ணை ஏற்றிக்கொண்டு சுமார் 50 மீற்றர் தூரம் செல்லுகையில் குழந்தை பிறப்பதற்கான வலி எடுத்து,
பெண் குழந்தைஒன்று அம்புயூலன்ஸ் வண்டியில் பிறந்துள்ளது.தன்னையும் தனது பெண் குழந்தையையும் சுகமான முறையில் எதுவித ஆபத்துமில்லாமல் பிரசவம் பார்த்த
வவுணதீவு நிலையத்தின் 1990 சுவசெரிய இலவச அம்புயூலன்ஸ் சேவையின் உத்தியோகத்தர்களுக்கு நன்றிகளை குறித்த தாயார் தெரிவித்துள்ளார்.
தற்போது குறித்த தாயும் குழந்தையும் கரடியனாறு வைத்தியசாலையில் ஆரோக்கியமாக உள்ளனர்.
0 comments: