மட்டக்களப்பு, வாழைச்சேனை காகித ஆலைக்கு அமைச்சர் விமல் வீரவன்ச இன்று விஜயமொன்றினை மேற்கொண்டு அதன் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாக ஆலையின் முகாமைத்துவத்துடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்த மூர்த்தி ஆகியோர்கள் உடன் சென்றிருந்தனர்.
பாழடைந்து காணப்படும் இவ்விடத்தினை நகரமாக்குவதாகவும் இது மீண்டும் இயக்கப்படுவதனால் நம் நாட்டிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்பு வழங்கமுடியும் என்றும் வெளிநாட்டில் இருந்து காகிதங்களை இறக்குமதி செய்ய தேவையில்லையென்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்து மீண்டும் செயல்பட வைக்கும் நடவடிக்கையினை மேற்கொள்வதாக அமைச்சர் விமல் வீரவன்ச மேலும் குறிப்பிட்டார்.
2014ஆம் ஆண்டு முதல் காகித ஆலையை இயக்க முடியாமல் இதன் உற்பத்திகள் நிறுத்தப்பட்டன.
500 - 3000 பேர் வரை இவ் ஆலையில் தொழில் புரிந்து வந்தனர். அவர்கள் தங்களது தொழிலை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது வாழ்ந்து வருகின்றனர். மேலும், ஆலையினை சுற்றிய வளாகமும் பற்றைக்காடுகளாக பாழடைந்து காணப்படுகின்றது.
0 comments: