அஸர்பைஜானில் உயிரிழந்த இலங்கை மாணவிகளின் சடலங்களை நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு உறவுகள் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
துருக்கியின் தெஹ்ரான் நகரிலுள்ள இலங்கை தூதுதரகத்தின் மூலம் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அஸர்பைஜானின் பக்கு தலைநகரில் அமைந்துள்ள காஸ்பியன் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மூன்று இலங்கை மாணவிகள் விஷ வாயுவை சுவாசித்ததால் உயிரிழந்தனர்.
கடுவலை மற்றும் பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 22 மற்றும் 23,25 வயதுடைய மல்ஷா சந்தீபனி, தருக்கி அமாயா, தவுசி ஜயவோதி ஆகிய மாணவிகளே உயிரிழந்துள்ளனர். இவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரிகள் இருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த மாணவிகளின் சடலங்களை எதிர்வரும் சில தினங்களில் நாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளதாக வௌிநாட்டு உறவுகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த மாணவிகள் தங்கியிருந்த விடுதியின் கீழ் மாடியில் தீ பரவல் ஏற்பட்டுள்ள நிலையில், அதன் புகையினை சுவாசித்ததில் மூன்று மாணவிகளும் மயக்கமுற்றுள்ளனர். பின்னர் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்கள் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
வெளிநாடு ஒன்றில் இலங்கை மாணவிகள் மூவர் உயிரிழப்பு! பொலிஸார் தீவிர விசாரணை



0 comments: