Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கிழக்கு மாகாண பிரதிப்பொலிஸ்மா அதிபர் கடமைகள் பொறுப்பேற்பு

கிழக்கு பிராந்திய சிரேஸ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபராக லலித் பத்திநாயக்க இன்று தனது கடமைகளை மட்டக்களப்பு சிரேஸ் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இன்று காலை தனது கடமைகளை பொறுப்பேற்க வந்த கிழக்கு பிராந்திய சிரேஸ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபருக்கு பொலிஸ் அணிவகுப்பு மரியாதையுடன் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து மும்மத அனுஸ்டானங்களுடன் தனது கடமைகளை பிரதிப்பொலிஸ்மா அதிபர் ஆரம்பித்தார்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களுக்கான பிரதிப்பொலிஸ்மா அதிபர்கள்,சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள்,பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர்கள்,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இன்று கடமைகளைப்பொறுப்பேற்றுக்கொண்ட கிழக்கு பிராந்திய சிரேஸ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களுக்கும் பிரதிப்பொலிஸ்மா அதிபராக கடமையாற்றுவார்.

அண்மையில் கிழக்கு பிராந்திய சிரேஸ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபராக இருந்த கபில ஜயசேகர ஓய்வுபெற்றுச்சென்றதை தொடர்ந்து கிழக்கு பிராந்திய சிரேஸ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபராக லலித் பத்திநாயக்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










Post a Comment

0 Comments