Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பெண் வைத்தியர் கொலை! நால்வரும் என்க்கவுண்டரில் சுட்டுக்கொலை!

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட அதே இடத்தில் வைத்து 4 குற்றவாளிகளும் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர். ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கடந்த 27ம் தேதி புதன் கிழமை மாலை கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஹைதராபாத்தின் சத்தனபள்ளி டோல் கேட் அருகே இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. இந்த கொலையில் தொடர்புடைய நான்கு பேரையும் போலீசார் அதன்பின் 24 மணி நேரத்தில் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். கொலையாளிகள் முகமது ஆரிப் 26, ஜொள்ளு சிவா 20, ஜொள்ளு நவீன் 20, சிண்டகுண்டா சென்னைகேஷ்வலு 20 என நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது இவர்கள் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த என்கவுண்டர் நடந்த இடம் அந்த பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட இடமாகும்.ஆம் சத்தனபள்ளி டோல் கேட்டில்தான் இந்த வன்புணர்வு சம்பவம் நடந்தது. அங்கிருக்கும் புதருக்கு அருகேதான் இந்த அந்த பெண் கொலை செய்யப்பட்டார். அவர் அங்கு கொடுமை படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இன்று அதே இடத்திற்கு போலீசார் குற்றவாளிகள் நான்கு பேரையும் அழைத்து சென்றனர். பொதுவாக குற்றவாளிகளை குற்றங்களை எப்படி செய்தார்கள் என்பதை விளக்க வேண்டும். இதை விசாரணை அறிக்கையில் சேர்ப்பார்கள். இதற்காக அவர்களை அழைத்து சென்றுள்ளனர்.
இன்று அதிகாலை அந்த 4 பேரும் சம்பவ இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.எப்படி குற்றம் நடந்தது என்று விளக்குங்கள் என்று போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர். சரியாக அங்கு 6 போலீசார் வரை சென்றுள்ளனர்.
அப்போது நான்கு பேரும் தப்பி செல்ல முயன்றதால் அங்கேயே வைத்து போலீசார் நான்கு பேரையும் என்கவுண்டர் செய்துள்ளனர். அந்த பெண் எங்கு துடிதுடிக்க கொலை செய்யப்பட்டாரோ அதே இடத்தில் வைத்துதான் இந்த 4 பேரும் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments