Home » » போலிக் கடிதம் தயாரித்து காசை சுருட்டிய கூட்டமைப்பு முக்கியஸ்தர்

போலிக் கடிதம் தயாரித்து காசை சுருட்டிய கூட்டமைப்பு முக்கியஸ்தர்


சுவிஸ்நாட்டில் வசிக்கும் இளைஞன் ஒருவருக்கு போலியாக கடிதம் தயாரித்து பணத்தை சுருட்டிய கூட்டமைப்பின் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர் சஜீவன் சண்முகலிங்கம் தொடர்பான தகவல் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது

இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது

முள்ளிவாய்கால் இறுதி யுத்தத்தில் தந்தை காணமல் போன நிலையில்  குடும்ப நிலை காரணமாக 2015 ம் சுவிஸ் நாட்டில் குடியோறியுள்ளார்.ஜெகதீஸ்வரன் யாழவன் எனும் இளைஞன்

இவருடைய தாய் தற்பொழுது முல்லைத்தீவு முள்ளிவளை என்னும் இடத்தில் வசித்து வருகிறார்.

மேலும் சுவிஸ் நாட்டில் குடியேறிய இளைஞனுக்கு அந்த நாட்டின் நிரந்தர விதிவிடம் வழங்குவதற்கான நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற நிலையில் குறித்த இளைஞனுக்கு தன்னுடைய தந்தை காணமால் போனதை உறுதிப்படுத்த பொதுஅமைப்புகளின் கடிதம் தேவைப்பட்டுள்ளது.

இக்கடிதத்தை பெற்றுத் தரும்படி போஸ்கோ என்ற மரியதாஸ் மோகனராஜ் ஊடாக அறிமுகமாகியுள்ளார் சஜீவன் சண்முகலிங்கம்.

சஜீவன் சண்முகலிங்கம் முல்லைதீவில் உள்ள பிரஜைகள் உரிமைகளுக்கான அமையம் என்ற பொது அமைப்பின் கடிதத் தலைப்பை  போலியாக உருவாக்கி கடித்த்தை போலியாக தயாரித்து குறித்த இளைஞனுக்கு viber மூலம் அனுப்பி ரூபா 30,000 கேட்டுள்ளார்.

கடிதத்தின் உண்மை தன்மையை அறியாத இளைஞன் தனது உறவினரான சுஜிவன் என்பவரிடம் மேலே குறிப்பிட்ட தொகையை சஜீவன் சண்முகலிங்கத்தின் Boc கணக்கு இலக்கமாகிய 70301444 என்ற கணக்கு இலக்கத்திற்கு வைப்பிலிடுமாறும் வைப்பிட்டபின் கடிதத்தை பெற்று தனக்கு அனுப்புமாறும் கோரிக்கை விடுத்தது உள்ளார்.

குறித்த தொகையை வைப்பிலிட்டு கடிதத்தை பெற்று கொண்ட சுஜிவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. குறித்த கடிதம் போலி என்பதை கண்டறிந்த குறித்த இளைஞனின் உறவினர்  குறிப்பிட்ட கையடக்க தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்திய பொழுது அவ்விலக்கமானது இரத்தினம் சுபத்திரா என்பவருடையது கண்டறியப்பட்டது. 


மேலும் பிரஜைகள் உரிமைகளுக்கான அமையத்தின் தலைவர்  மரியதாஸ் அடிகளாரிடம் தொடர்பு கொண்ட பொழுது குறித்த கடிதத்தை தங்களது அமைப்பு வழங்கவில்லை என உறுதிப்படுத்தியுள்ளது.

இவ்வாறாக சஜீவனின் மோசடிகள் தொடர்பில் பலரும் விசனம் தெரிவித்து வருகின்றனர் கூட்டமைப்பு உறுப்பினர்கள் போரின் கோரத்தண்டவத்தை அனுபவித்தவர்களை மேலும் துன்பத்தில் ஆழத்துவது வேலியே பயிரை மேய்வதற்கு ஒப்பானதாகும்

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |