Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தெற்காசிய விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் வென்றார் சண்முகேஸ்வரன்!

13ஆவது தெற்காசியப் போட்டி விழாவில் பத்தாயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார் இலங்கைத் தமிழ் வீரர் குமார் சண்முகேஸ்வரன்.
நேபாளத்தில் நடைப்பேற்று வரும் 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் நேற்றுமுன்தின காலை கடும் குளிருக்கு மத்தியில் நடைப்பெற்ற 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர் குமார் சண்முகேஸ்வரன் கலந்துகொண்டார். தான் பங்கேற்ற முதலாவது சர்வதேச போட்டியிலேயே பதக்கம் வென்று சாதித்துள்ளார்.
பந்தயத் தூரத்தை 30 நிமிடம் 49.20 செக்கன்களில் ஓடி முடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இதில் தங்கத்தை இந்தியாவும் (30,49,20), வெண்கலத்தை நேபாளமும் (30,50,06) வென்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments