Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இன்றிலிருந்து இலங்கை முழுவதும் ஏற்படவுள்ள மாற்றம்!

நாட்டில் ஏற்பட்டிருந்த சீரற்ற கால நிலையில் இன்று முதல் மாற்றம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கை முழுவதும் கொட்டித் தீர்த்த மழையினால் பல அணைகளின் வான்கதவுகள் திறக்கப்பட்டன. இதனால் பல்வேறு கிராமங்கள் நீரில் மூழ்கின.
பொது மக்கள் பலர் இருப்பிடங்களைவிட்டு வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இடம்பெயர்ந்த பொது மக்கள் விசேட முகாம்களில் வைக்கப்பட்டனர் இவர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதேவேளை மட்டக்களப்பில் பெருக்கெடுத்த வெள்ளத்தினால் பல இடங்களில் இன்னமும் நிலைமை சீராகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ச்சியாக ஏற்பட்ட காலநிலை மாற்றத்தினால் பொதுமக்கள் பல்வேறு இடர்களைச் சந்தித்திருந்தனர்.
இந்தநிலையில், நாடு முழுவதும் நிலவும் மழையுடனான வானிலையில் இன்று முதல் மாற்றம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Post a Comment

0 Comments