Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கல்முனையில் குடிநீர் குழாய் மூன்று நாட்களாக உடைப்பெடுத்து நீர் வெளியேற்றம்


கல்முனையில் குடிநீர் குழாய் உடைப்பெடுத்து நீர் வெளியேறி வருவதால் அப்பகுதியால் பயணிக்கும் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதியில் கல்முனை இலங்கை போக்குவரத்து சபைக்கு அருகே உள்ள குடிநீர் குழாய் ஒன்று கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் உடைந்து பெருமளவிலான நீர் வெளியேறி வருகிறது.

குறித்த நீர் குழாய் மூலம் அதிகளவான நீர் வெளியேறிய வண்ணம் கவனிப்பாரற்று காணப்படுவதோடு பொதுமக்களின் போக்குவரத்திற்கும் அசௌகரியங்களை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரங்களில் குறித்த பகுதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ள நீர் முழுவதுமாக வெளியேறாத நிலையில் இவ்வாறு குடிநீர் குழாய் உடைப்படைந்துள்ளமையால் குறித்த குழாய் வழியாக வெள்ள நீர் குடி நீருடன் கலந்து விடக்கூடிய அபாய நிலையும் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
எனவே, உரிய அதிகாரிகள் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி கூடிய விரைவில் தீர்வொன்றை பெற்றுத்தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments