Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்/சிவாநந்த வித்தியாலயம் தேசிய பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் விஜயசிறி அவர்கள் இன்று காலமானார்

ஆரையம்பதியை பிறப்பிடமாகக் கொண்ட இவர் மட்/புனித மிக்கேல் கல்லூரியின் முன்னாள் உடற்கல்வி ஆசிரியராவார். சிவாநந்த வித்தியாலயம் தேசிய பாடசாலையில் உடற்கல்வி ஆசிரியராக கடமையாற்றுகின்ற இவர் 30.11.2019 அன்று இரவு கால் காயத்தில் ஏற்பட்ட கிருமித்தொற்றுக் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்
அனுமதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் 01.12.2019 மாலை 4.00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.  அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும் பிராத்திக்கின்றார்கள் மட்/சிவாநந்த வித்தியாலயம் தேசிய பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள். 

Post a Comment

0 Comments