Home » » கிளிநொச்சியில் தமிழ் மக்களின் காணிகளுக்கு கள்ள உறுதி செய்து விற்பனை செய்யும் ஆசாமி

கிளிநொச்சியில் தமிழ் மக்களின் காணிகளுக்கு கள்ள உறுதி செய்து விற்பனை செய்யும் ஆசாமி



கிளிநொச்சி மாவட்டத்தில் (பாகீஸ்)'பாரூக் பாய்ஸ்' எனும் நபர் தமிழர்களின் காணிக்கு கள்ள உறுதி செய்து தன்னுடைய பெயரில் மாற்றி அவற்றை விற்பதை தொழிலாக கொண்டுள்ளார்.இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது

தான் இராணுவ உளவுத்துறையை சேர்ந்தவன் எனக் கூறிக்கொள்ளும் இவர் விடுதலை புலிகளுடன் நெருங்கியவர்களின் காணிகளையும், ஏழை எளியவர்களின் காணிகளையும் இவ்வாறு கள்ள உறுதி செய்து ஆக்கிரமித்து வருகிறார்.

புலனாய்வு துறையை சேர்ந்தவர் என்றகாராணத்தினால் பலர் அச்சத்தில்  ஒதுங்கியுள்ள நிலையில் சிலர்  பொலிஸில் முறைப்பாடும்  செய்துள்ளனர். ஆனால் இது தொடர்பான எந்த நடவடிக்கையும் இதுவரை பொலிஸாரினால் முன்னெடுக்கப்படவில்லை. முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் உறவினர் என இதுவரைநாளும் கூறிவந்த குறித்த மோசடி நபர் இப்போது ஆட்சி மாறியவுடன் தான் நாமல் ராஜபக்சவுக்கு நெருக்கமானவர் எனவும் தமது மோசடிக்கான ஒரு பாதுகாப்பை தேடும் வகையிலும் நாமல் ராஜபக்சவுடன் எங்கோ எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது முகநூலில் பதிவேற்றியுள்ளார். இது தொடர்பில் திரு.நாமல் ராஜபக்சவின் அலுவலகத்திற்கு முறைப்பாடு ஒன்றும் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.

மேலும் குறித்த நபருடன் சேர்ந்து பல தமிழ் அரச ஊழியர்களும், தரகர்களும் இந்த கேவலமான செயலில் ஈடுபட்டு வருவதாகவும் அத்துடன் குறித்த நபருடன் இணைந்து கள்ள உறுதி செய்து விற்பனை செய்வதற்கு உறுதுணையாக இருக்கும் வழக்கறிஞர், நொத்தாரிஸ், கிராம சேவகர்கள், தரகர்கள் என அனைவரின் தகவலும் தன்னிடம் இருக்கின்றது எனவும் இது போன்ற செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பின் உடனடியாக எம்மை தொடர்புகொள்ளவும்.என்று திணேஸ் திணேஸ் என்ற முகநூலின் பதிவொன்று கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. 

இது தொடர்பாக எமது செய்திச் சேவை திணேஸ் என்பவரை தொடர்பு கொண்டு இவ்விடயம் தொடர்பாக வினவிய போது கடந்த திங்கட்கிழமை தன்னை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர் எனவும்;.அதன் போது பல சமூக அக்கறை கொண்ட நலன்விரும்பிகள் அவர்களை பகைக்க வேண்டாம் என்று பலர் தனக்கு அறிவுரை வழங்கினார்கள் இருந்தும் எந்த பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை நான்  பொலிஸ் நிலையம் செல்வேன் என்று அழப்பையேற்று கிளிநொச்சி பொலிஸ் நிலையம் சென்ற போது பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் அங்கிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் இருவருக்கும் முன்னிலையில் பாகீஸ் என்பவர் கடும் தகாத வார்த்தைகளால் தன்னை திட்டி கை கால்களை உடைப்பேன்,தேவை ஏற்பட்டால் கழுத்தை அறுப்பேன் என்று கூறியதாகவும் அப்போது அந்த பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி சிரித்துக்கொண்டு வேடிக்கை பார்த்தாகவும் பின்பு நானாக இருந்தாலும் இப்படித்தான் உன்னை செய்வேன் என பொலிஸ் பொறுப்பதிகாரி குறித்த மோசடி நபருக்கு ஆதரவாக பேசியதாக தெரிவித்தார்.

மேலும் இதன் பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் இவரின் மோசடிக்கு உதவி செய்வதாகவும் அந்த மோசடி நபருடன் தனக்கு எந்தவொரு முன் பகையும் இல்லை தான் தமிழ் மக்களின் நலனுக்காக நல்லெண்ண அடிப்படையில் இந்த செயலில் இறங்கியதாகவும் தினேஸ் என்பவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் தினேஸ் என்பவருடன் குறித்த மோசடி நபர் பொலிஸ் நிலையத்தில் தரக்குறைவாக பேசிய ஒலிப்பதிவும் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது அதன் இணைப்பு
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |