Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தமிழர் பகுதி ஒன்றில் சோதனையில் சிக்கிய சிறைச்சாலை உத்தியோகத்தர்

மட்டக்களப்பு சிறைச்சாலைக்குள் ஹெரோயின் போதைப் பொருளை கொண்டு செல்ல முற்பட்ட சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரை 35 மில்லிக்கிராம் போதைப் பொருளுடன் நேற்று திங்கட்கிழமை (23) இரவு கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த சிறைச்சாலையில் கடமைபுரியும் சிறைச்சாலை உத்தியோகத்தர் சம்பவதினமான நேற்று திங்கட்கிழமை அம்பாறை அக்கரைப்பற்று நீதிமன்றத்திற்கு வழக்குக்கு சிறைக்கைதிகளை பஸ்வண்டியில் அழைத்துச் சென்று பின்னர் சிறைச்சாலைக்கு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் வெளியில் சென்று சிறைச்சாலைக்கு இரவு திரும்பிய உத்தியோகத்தர்களை சிறைச்சாலை அதிகாரி சோதனையிட்ட போது அதில் ஒருவரிடம் 35 மில்லிக் கிராம் ஹெரோயின் போதைப் பொருளை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தார்
இதனையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதில் கைது செய்யப்பட்டவர் பொலநறுவையைச் சோந்த 34 வயதுடையவர் எனவும் இவரை நீதிமன்றில்ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments