Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

புதிய ஜனாதிபதியிடம் இறுதியாக வேண்டுகோள் விடுத்த மகிந்த தேசப்பிரிய!

புதிய ஜனாதிபதியிடம் இறுதியாக ஒரு வேண்டுகோள் விடுக்க விரும்புவதாகவும் மறைந்து போயுள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்த விரைவாக நடவடிக்கை எடுத்து ஜனநாயகத்தை உறுதிப்படுத்துமாறும் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியதன் பின்னர் இறுதியாக இந்த வேண்டுகோளை அவர் விடுத்தார்.
ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டது போன்று புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர் செயற்படுவார் என்ற எதிர்பார்ப்பு நாட்டு மக்களிடம் காணப்படுவதாகவும் அவர் தனது உரையில் மேலும் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments