Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஐக்கிய தேசிய கட்சியின் புதிய தலைவராகும் கருஜயசூரிய? தென்னிலங்கை ஊடகம் தகவல்

சமகால சபாநாயகர் கருஜயசூரியவிடம் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் வழங்கப்படவுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் தற்காலிக தலைவராக கரு ஜயசூரியவை நியமிக்க, தற்போதைய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க இணங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் நடவடிக்கைகள் கரு ஜயசூரியவினால் முன்னெடுக்கப்படவுள்ளது.
புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை கரு ஜயசூரிய செயற்படுவார் என குறித்த ஊடகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
ரணில் அனைத்து பதவிகளில் இருந்தும் விலக மறுத்தால், சஜித் பிரேமதாஸ தலைமையில் புதிய கட்சி உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments