Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ரணில் எடுத்த முடிவு! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு அறிவிப்பு.. அடுத்தது என்ன?


பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாளை தனது பதவியை இராஜினாமா செய்வார் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் பதவியிலிருந்து அவர் விலகியதுடன் 15 பேர் கொண்ட அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.
அத்துடன், நாடாளுமன்ற தேர்தலையும் உடனடியாக நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்று ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ளார்.
இந்த நிலையில் பல முக்கிய அமைச்சர்கள் கடந்த இரு நாட்களில் இராஜினாமா செய்திருந்தனர்.
எனவே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நாளை பிரதமர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு விரைவில் பொதுத்தேர்தல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments