Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சற்று முன்னர் பிரதமர் பதவியை துறந்த ரணில்


பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியிலிருந்து விலகியதாக சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
கடந்த 16ஆம் திகதி இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றிருந்த நிலையில் அதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமறிங்கிய கோட்டாபய ராஜபக்‌ஷ வெற்றி பெற்றிருந்தார்.
இதனை தொடர்ந்து புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் களமிறங்கியிருந்த ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ ஐ.க.வின் பிரதித் தலைவர் மற்றும் அமைச்சர் ஆகிய பதவிகளில் இருந்து விலகியிருந்தார்.
இந்த நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் விலகி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தரப்பினருக்கு வழி கொடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினராலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் பதவி விலகலாம் என செய்திகள் வெளியாகிருந்தன.
இந்நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று முன் தனது பதவி விலகல் கடிதத்தினை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments