Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

திருகோணமலையில் 1023 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு!

திருகோணமலை மாவட்டத்தில் ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரைக்கும் டெங்கு நோயினால் 1023 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார தொற்று நோயியலாளர் பிரிவின் பொறுப்பதிகாரி தங்கவேல் நிலோஜன் தெரிவித்துள்ளார்.
சுகாதார திணைக்களத்தினால் விடுக்கப்பட்டு வரும் அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் டெங்கு நோய் பரவும் விதத்தில் செயல்படுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திருகோணமலையில் பிராந்திய சுகாதார திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் ஐந்து சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிகளவில் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், திருகோணமலை, உப்புவெளி, மூதூர், கிண்ணியா மற்றும் குறிஞ்சாக்கேணி போன்ற பகுதிகளில் அதிகளவிலான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெங்கு நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக நீர் தேங்க கூடிய இடங்களை தமது வீடுகளில் பரிசோதனை செய்து அகற்றுமாறும், வீட்டு கட்டட நிர்மாணத்தில் நீர் தொட்டிகள் அமைப்பதை தவிர்த்து பாதுகாப்பான பிளாஸ்டிக் நீர்த்தாங்கிகளை பயன்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை விசேடமாக அரச சார்பற்ற நிறுவனங்களினால் தேவையற்ற விதத்தில் குழாய் கிணறுகள் அமைப்பதை தடுக்குமாறும் சுகாதார திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

Post a Comment

0 Comments