Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதியின் மற்றுமொரு உத்தரவு!! ஏற்றுக் கொள்வார்களா தமிழர்கள்?

இலங்கையின் தேசிய கீதம் இனிவரும் காலங்களில் சிங்கள மொழியில் மாத்திரமே உபயோகிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உத்தரவு பிறப்பித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இது தொடர்பாக சிங்கள ஊடகம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் தேசிய கீதமானது சிங்கள மொழியில் இயற்றப்பட்டுள்ளதுடன் அதன் தமிழ் மொழிபெயர்ப்பு 1948ம் ஆண்டே வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டிருந்தது.
இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் 1948ம் ஆண்டு கொண்டாடபட்ட சுதந்திர தினத்தின் போது நாட்டின் தேசிய கீதம் தமிழ் மொழியிலும் பாடபட்டது.
அதனை தொடர்ந்து அரச நிகழ்வுகளின் போது தேசிய கீதம் தமிழில் பாடப்படுவதை தவிர்த்து வந்தனர். எவ்வாறாயினும் 2015ம் ஆண்டு இலங்கையின் ஆட்சியை கைப்பற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சி அரசாங்கம் 2015ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04ம் திகதி கொண்டாடபட்ட 67வது தேசிய சுதந்திரத்தின் போது தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments