Home » » இலங்கையில் கையடக்க தொலைபேசியை பாவிப்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

இலங்கையில் கையடக்க தொலைபேசியை பாவிப்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

இலங்கையில் கையடக்க தொலைபேசி பயனாளர்களின் உரையாடல்களை மூன்றாம் தரப்பினர் அல்லது வேறு எந்தவொரு தரப்பினரும் செவிமடுக்கும் ஆபத்து உருவாகியுள்ளதாக பொது உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை மக்கள் பாவிக்கும் எந்தவொரு ஸ்மார்ட் கையடக்க தொலைபேசியிலும் பயன்படுத்தப்பட்டுள்ள சிம் அட்டையின் பாதுகாப்பு சிக்கலை பயன்படுத்தி இவ்வாறு ஒட்டுக் கேட்க முடியும் என குறிப்பிடப்படுகின்றது.
இலங்கை உட்பட உலகின் 30 நாடுகளில் பயன்படுத்தப்படும் சிம் அட்டைகளின் கடவுச்சொல் செயற்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டுள்ள Sim tool kitஇல் உள்ள தொழில்நுட்ப குறைப்பாடு காரணமாக இந்த பாதுகாப்பு சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
Adoptive Security என்ற கையடக்க தொலைபேசி பாதுகாப்பு தொடர்பில் ஆய்வு நடத்தும் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் நடைபெற சில வாரங்கள் உள்ள நிலையில் அவ்வாறான ஆபத்து குறித்துவெளியாகி உள்ள தகவல் காரணமாக பாரிய பிரச்சினை எழுந்துள்ளதாக அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |