Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்

மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் அலுவலகத்திற்கு சென்ற பிராந்திய செய்தியாளர் ஒருவர் தாக்கப்பட்டு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு பிராந்திய செய்தியாளர் முகமட் சஜி என்பவரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
தேர்தல் கூட்டங்கள் தொடர்பிலான தகவல்களைப்பெறுவதற்காக காத்தான்குடியில் இருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் அலுவலகத்திற்கு சென்றபோதே இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.
வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அதிர்வு அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் குறித்த ஜனாதிபதி வேட்பாளர் நேற்று முன்தினம் தோன்றி உரையாடிய நிலையில் அங்கு கேட்கப்பட்ட கேள்விகள் தொடர்பில் கூறியே இந்ததாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இதன்போது அரசாங்க தொலைக்காட்சி செய்திப்பிரிவின் முகாமையாளர் இர்பான் முகமட்டுக்கும் கொலை அச்சுறுத்தல் விடுத்து தம்மீது தாக்குதல் நடாத்தியதாக தாக்கப்பட்ட ஊடகவியலாளர் தெரிவித்தார்.
தற்போது காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் ஊடகவியலாளர் சஜியை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் சென்று பார்வையிட்டதுடன் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் இவ்வாறான தாக்குதல்களுக்கு தமது கண்டனத்தினையும் தெரிவித்துள்ளனர்.


Post a Comment

0 Comments