தனது ஆட்சியின் போது பிரதமர் யார் என்பதை தானே தீர்மானிக்கப் போவதாகவும், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் இது தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு எவ்வித அவசியமும் இல்லை என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
ஹொரனை பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரதமர் பதவி தொடர்பிலோ அல்லது அமைச்சரவை பதவிகள் தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளவில்லை, ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கும்போது கட்சியின் அனைவரது விருப்பத்திற்கமைய தீர்மானம் மேற்கொண்டதனை போன்றே பிரதமர் பதவி நியமிக்கும் போது கட்சியின் விருப்பம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையை பெறும் நபருக்கு பிரதமர் பதவி வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாக பதவியேற்றதும், தானே தொடர்ந்தும் பிரதமர் பதவியை வகிக்கப் போவதாக சமகால பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் நடந்த ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments