Advertisement

Responsive Advertisement

அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகும் வாய்ப்பு இருக்கின்றதாம்!

அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2 நாளைக்கு முன்பு அரபிக்கடலில் இரண்டு புயல்கள் உருவானது. 
இதனால் பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், பலத்த மழை மட்டுமே கிடைத்தன. 
இப்போது, கியா, மகா ரெண்டு புயல்களும் பெரிதாக கை கொடுக்காத போது, இன்னொரு புயலும் வங்கக்கடலில் உருவாக போகிறதாம்.
வங்கக் கடலில் குறிப்பாக அந்தமான் அருகே அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறவும் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தாழ்வு பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நகர்வதை பொறுத்துதான், மழை பற்றின நிலவரம் கணிக்க முடியும் என்றும், அதன் சாதக பாதகங்களை தீர்மானிக்க முடியும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Post a Comment

0 Comments