Advertisement

Responsive Advertisement

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் எவருக்கும் அஞ்சக் கூடாது: மகிந்த தேசப்பிரிய

தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் எவருக்கும் அஞ்சக் கூடாது எனவும் அவர்கள் தேர்தல் ஆணைக்குழு மற்றும் நீதிமன்றத்திற்கு மாத்திரமே பொறுப்புக் கூற வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தியுள்ள சகல அரச அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள செய்தியில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7வது ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பு நாளைய தினம் நடைபெறவுள்ளது.
இதனடிப்படையில் ஜனாதிபதியை தெரிவு செய்யும் பணிகள் தொடர்பான பொறுப்பு, தேர்தல் நடத்தும் வினைதிறன் மற்றும் பக்கசார்பின்றி கடமையை நிறைவேற்றுவது தொடர்பிலான பொறுப்பை கௌரவமான வரலாற்றை கொண்டிருக்கும் அரச ஊழியர்களிடம் தேர்தல் ஆணைக்குழு வழங்கியுள்ளது எனவும் மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தி அடங்கிய கடிதத்தை அவர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

Post a Comment

0 Comments